முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் தஞ்சம் புகும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு..

கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அந்நாட்டில் வசிக்கும் பஞ்சாபிகள் சங்கம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்க கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதிலில் இது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க அரசு அளித்த பதிலில், கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 146 பெண்கள் உள்பட 2,306 பேரும், 2015-ம் ஆண்டில் 96 பெண்கள் உள்பட 2,971 பேரும் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்தாக கூறப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டில் 123 பெண்கள் உள்பட 4,088 இந்தியர்களும், 2017-ம் ஆண்டில் 187 பெண்கள் உள்பட 3,656 பேரும், நடப்பு ஆண்டில் ஜூலை மாதம்வரை 296 பெண்கள் உள்பட 7,214 இந்தியர்கள் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.