அமெரிக்க அரசு அலுவலகங்களுக்கான செலவின நிதி மசோதா நிறைவேற்றப்படாததால் இன்றுடன் 21வது நாளாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று வெள்ளை மாளிகையை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
இதற்காக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கையில் பதாகைகளுடன் வாஷிங்டன் சாலைகளில் குவிந்தனர்.
அப்போது மூடப்பட்டுள்ள அரசு அலுவலகங்களை திறக்க வலியுறுத்தியும், ஊதியம் வழங்க கோரியும் ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அரசு அலுவலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முடிவடைந்ததால், கடந்த மாதம் 22ம் தேதி முதல் அலுவலகங்கள் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.