முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் இரு விமானங்கள் மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு..

அமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் அலாஸ்கா மகாணத்தில் உள்ள சுற்றுலா தளமான கெட்சிகன் நகரில் தண்ணீரிலும் இறங்கும் விமானங்கள் மூலம் பனிப்பரப்பை ரசிக்க பயணிகளை அழைத்துச் செல்வது வழக்கம்.

இதே போல கனடாவின் ராயல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் வந்த பயணிகளை இரு கடல் விமானங்களில் அழைத்துச் சென்றனர்.

விமானங்கள் மீண்டும் கெட்சிகன் நகருக்கு திரும்பி வந்த போது, எதிர்பாரதவிதமாக இரு விமானங்களும் மோதிக்கொண்டன.

இதில் 11 பேருடன் சென்ற ஒரு விமானத்தில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேருடன் சென்ற விமானத்தில் மூவர் உயிரிழந்தனர்.

இருவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.