முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொலை விவகாரம்: 75 நகரங்களில் பரவிய கலவரம்…

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பின இளைஞர் கடந்த 25-ம் தேதி மின்னபொலிஸ் போலீஸ் கைது செய்யும்போது உயிரிழந்தார்.

ஆயுதங்களின்றி தரையில் கிடந்த ஜார்ஜின் கழுத்தில் போலீஸ் டெரிக் சவின் என்பவர் மண்டியிட்டதாலேயே ஜார்ஜ் உயிரிழந்தாக கூறி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

போலீஸ் வாகனங்கள், வங்கிகள், உணவகங்கள், மின்னபொலிஸ் காவல்நிலையம் என பல இடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.

வாஷிங்க்டன், ஜியார்ஜியா,நியுயார்க்,புளோரிடா, டெக்சாஸ் உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகளவில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவில் போலீஸ் பூட்ஸ் காலால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்த கருப்பர் ஜார்ஜ் பிளாய்டின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை

46 வயதான ஜார்ஜ் பிளாய்ட் “இருதய நுரையீரல் அடைப்பினாலும் கழுத்து நெரிபட்டும் மரணமடைந்துள்ளார். மரணமடைந்த விதம் ‘மனித விரோதக் கொலை’ என்று மினியாபோலீஸ் மருத்துவ ஆய்வாளர் தெரிவித்தார்.

ஆனால் மரணமடைந்த விதம் சட்ட ரீதியாகத் தீர்மானிக்கப்படும் நோக்கம் சார்ந்த ஒரு கொலைச்செயல் என்று கூறுவதற்கில்லை என்று பிரேதப் பரிசோதனையில் ரெண்டுங்கெட்டானாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினசோட்டா சட்டத்தின் படி, ‘பிரேதப் பரிசோதனை மருத்துவ ஆய்வாளர் நடுநிலையானவர், சுதந்திரமாகச் செயல்படுபவர் எனவே இவர் சட்ட ரீதியான அதிகாரம் அல்லது சட்ட அமலாக்க முகமை தொடர்புடையவர் அல்ல’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கழுத்து அழுத்தப்பட்டதால் குரல்வளை நெரிபட்டு இறந்திருக்கிறார் என்பதை பிரேதப் பரிசோதனை கூறியுள்ளது, ஆனால் இது கொலைக்குற்றத்துக்கான ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுமா என்பது தெரியவில்லை.

இது குடும்பத்தினர் மேற்கொண்ட பிரேதப் பரிசோதனையாகும். டாக்டர் மைக்கேல் பேடன், டாக்டர் அலீசியா வில்சன் ஆகியோர் இந்த பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டனர். கழுத்து மிதிக்கப்பட்டதால் குரல்வளை நெரிக்கப்பட்டு மூளைக்கு ரத்தம் செல்லவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட கருப்பின நபருக்கு ஆதரவாக நியூயார்க் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை முக்கியமான 75 நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான நகரங்களில் ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்துள்ளதுடன், போலீஸ் வாகனங்கள், கட்டிடங்கள் என ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கலவரங்களை கட்டுப்படுத்த இந்த நகரங்களில் ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவந்துள்ளதுடன், ராணுவமும் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1992 ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு கலவரத்திற்கு பின்னர் தற்போது தேசிய பாதுகாப்பு படையினரை களமிறக்கியுள்ளனர்.மட்டுமின்றி மாகாண ஆளுநர் கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர நிலையை பிரகடப்படுத்தியுள்ளார்.

மொத்தம் 11 மாகாணங்களும், கொலம்பியா மாவட்டமும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைக்குள் தேசிய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது,