அமெரிக்காவில் புதிய நடை மேம்பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு..


அமெரிக்காவின் ஃபுளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம் அருகே புதிதாக கட்டப்பட்ட நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.

ஃபுளோரிடா மாகாணத்தின் மியாமி பகுதியில் அமைந்துள்ளது ஃபுளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம். இங்கு, பாதசாரிகள் எளிமையாக சாலையைக் கடக்க கடந்த வாரம் புதிதாக சிறிய நடை மேம்பாலம் கட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த மேம்பாலம் வியாழக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில், காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் மேலும் பலர் உயிரிழக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதுதவிர, பல கார்களும் மேம்பால இடிபாடுகளில் சிக்கியுள்ளன.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..

அதிமுக முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி கட்சி அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கம்

Recent Posts