முக்கிய செய்திகள்

திருப்பதியில் அமித்ஷாவிற்கு கருப்புக் கொடி : பாஜகவினர் மீது தாக்குதல்..


பாஜக தலைவர் அமித்ஷாவின் முன்னிலையில் அக்கட்சியினர் மீது தெலுங்கு தேசம் தாக்குதல் நடத்தியுள்ளது.

பாஜக கட்சியின் தலைவர் அமித்ஷா இன்று திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அங்கருந்த தெலுங்கு தேச கட்சிகள், ஆந்திராவுக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தெலுங்கு தேச கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் மோதல் உருவாகியது.

இதனையடுத்து அமித்ஷாவுக்கு பின்னால் வந்த கார் கண்ணாடியை தெலுங்கு தேச கட்சியனர் உடைத்தனர். மேலும், அங்கிருந்த பாஜகவினர் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பாதுகாப்புக் கருதி திருப்பதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.