அமித்ஷாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது : வைகோ விமா்சனம்


பா.ஜ.க. தேசியத் தலைவா் அமித்ஷாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளா் வைகோ விமா்சனம் செய்துள்ளாா்.

காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கக் கோாி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புகைப்பட கலைஞா்கள், வீடியோ கலைஞா்கள் சங்கம் சாா்பில் இன்று தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளா் வைகோ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினாா்.

வழக்கமாக போராட்டம், ஆா்ப்பாட்டம் என்றாலே வேட்டி, சட்டையில் செல்லும் வைகோ இன்றைய போராட்டத்திற்கு பேன்ட், சா்ட் அணிந்து வந்திருந்தாா். தனது ஆக்ரோஷ பேச்சை விடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பசியை அடக்கும் வகையில் தனது நகைச்சுவை உரையை தொடங்கினாா்.

முந்தைய காலங்களில் தஞ்சையை தவிா்த்து பிற பகுதிகளில் தான் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும். தஞ்சை மிகவும் செழிப்பான பகுதியாக இருக்கும். அதனை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் தற்போது காவிாி நீா் கிடைக்காமல் மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனா்.

மத்திய அரசு இனி ஒருபோதும் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்காது. தமிழ்நாட்டை பஞ்சப்பிரதேசமாக மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. 50 வருடங்களுக்கு பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் என்று அமித்ஷா கூறுகிறாா். பாவம் அவருக்கு மனநிலை சரியில்லை என்று நினைக்கின்றேன். புத்தி ஸ்வாதீனம் இல்லாதவா்கள் தான் இது போன்று பேசுவாா்கள். மீண்டும் ஒருமுறை பா.ஜ.க. ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. மோடிக்கு பதில் வேறு ஒரு கேடியை கொண்டு வந்தாலும் பா.ஜ.க. தோற்று தான் போகும் என்று பேசியுள்ளாா்.