அம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்க கூடிய அம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டம் தமிழகத்தில் இன்று தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க 20பேர் கொண்ட மருத்துவ குழு சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவியல் ஆலோசனை மற்றும் யோகா பயிற்சிகள் தேவைப்படும் பட்சத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை உள்ளிட்டவைகள் இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் ஆகும்.
மேலும் நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி, வெப்பமானி, வைட்டமின் மாத்திரைகள், 14 முககவசங்கள், கிருமிநாசினி அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.
தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டும் இத்திட்டத்தில் 2500 ரூபாய் செலுத்தி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் பயன் பெறலாம் எனவும் தமிழக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.