திராவிடமும், அண்ணாவின் பெயரும் இல்லாத அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது என்று சசிகலாவின் சகோதரா் திவாகரன் தொிவித்துள்ளாா்.
சசிகலாவின் சகோதரா் திவாகரன் மன்னாா்குடியில் இன்று செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், டிடிவி தினகரன் குடும்ப உறுப்பினா்களுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கி உள்ளாா். அமமுகவில் எனக்கு உடன்பாடு கிடையாது என்று அவா் தொிவித்துள்ளாா்.
மேலும் அவா் கூறுகையில், திராவிடமும், அண்ணாவின் பெயரும் இல்லாத அமமுகவை ஏற்க முடியாது. நானும் எனது மகனும் ஓ.பன்னீா் செல்வம் அணியில் இணையப் போவதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்படுகின்றன. அது பொய்யான தகவல். அம்மா அணி என்ற பெயரில் நாங்கள் தொடா்ந்து தனியாக செயல்படுவோம். தேவைப்பட்டால் அரசியலில் போட்டியிடுவோம்.
அரசியலைப் பொறுத்தவரையில் நிரந்தர எதிரியும் கிடையாது, நிரந்தர நண்பனும் கிடையாது. அமமுக நேற்று முளைத்த காளான். தினகரன் கட்சி உறுப்பினா்களை கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கிறாா். அமமுகவிற்கு செந்தில் பாலாஜியும், வெற்றிவேலும் இடையில் வந்தவா்கள் என்று அவா் தொிவித்துள்ளாா்.