அமமுக வழியாக அடுத்த பிரதமரை தமிழக மக்கள் தேர்வு செய்வர் : டிடிவி தினகரன்..

அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில், தங்கள் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன், மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் மத்திய, மாநில அரசுகள் அக்கறையுடன் செயல்படுவதில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து ஊழல்களும் ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் பிற அமைச்சர்கள் மீதுதான் முன் வைக்கப்படுகின்றன.

தற்போது ஒருவர் பின் ஒருவராக வெளியே வந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து விட்டனர். எப்படி அரசு ஒப்பந்தங்களைப் பெறும் அனைத்து ஒப்பந்ததாரர்களும் அமைச்சர்களின் உறவினர்களுக்கே சென்று சேர்கிறது.

பெட்ரோல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்வேறு பிரச்சனைகளைக் கையாள்வதில் பொதுமக்களிடையே மத்திய அரசு கெட்ட பெயர் எடுத்துள்ளது.

வளர்ச்சி என்று கூறி ஆட்சிக்கு வந்து விட்டு, அதற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. பனமதிப்பிழப்பு விவகாரத்தால் சிறு, குறு தொழில்கள் நசிந்து விட்டன.

வரும் மக்களவை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை. அமமுக வழியாக தமிழக மக்கள் அடுத்த பிரதமரை தேர்வு செய்வர் என்றார்.

முன்னதாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் தேர்தலுக்காக உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகிறது.

அக்டோபர் 7ஆம் தேதி திருப்பரங்குன்றத்திலும், அக்டோபர் 10ஆம் தேதி திருவாரூரிலும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

அப்போது நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். விரைவில் இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும். ஏற்கனவே களப்பணியில் இறங்கி, வெற்றி பெறத் தேவையான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

எதிர்க்கட்சியான திமுகவிற்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே 2வது இடத்திற்கு தான் போட்டி என்று கூறினார்.