மகளால் துரத்தப்பட்ட வயதான பெற்றோர்: பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்த பரிதாபம்!

கர்நாடக மாநிலம்  ஹூப்ளி பேருந்து நிலையத்தில் அனாதையாக தஞ்சமடைந்த வயதான தம்பதியை காவல்துறையினர் மீட்டு, அரசின் முதியோர் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். வயதான தம்பதியரை அவர்களது மகள் வீட்டை விட்டு துரத்தி விட்டதாகவும், வேறு வழியில்லாமல் பேருந்து நிலையத்தில் வந்து தஞ்சமடைந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அவர்களை அங்கிருந்து மீட்ட காவல்துறையினர் அரசு முதியோர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரிடம் காட்டுவதற்கு அவர்களிடம் அடையாள அட்டை,  முகவரிச் சான்று என எதுவுமே இல்லை. பழைய பெட்டி ஒன்றுடன், தள்ளாத வயதில் பொதுவெளியில் தஞ்சமடைந்த அந்த தம்பதியைப் பார்த்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். பொதுவாக வயதான பெற்றோரை மகன்கள்தான் வீட்டை விட்டு வெளியே துரத்துவார்கள் எனக் கூறுவதுண்டு. பெண்கள் பெற்றோர் மீது பரிவு காண்பிக்கக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை இருந்து வந்தது. இப்போது, அதுவும் மெல்லத் தகர்ந்து வருகிறது. எங்கே போகிறது நமது சமூகம்!

 

An elderly couple forced to take shelter at Bus Stand