முக்கிய செய்திகள்

ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு…

கரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெ.அன்பழகளின் உடல் நிலை குறித்து மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்து வருகிறார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் திமுக சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான ஜெ. அன்பழகன் கரோனா தொற்றால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைணில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆரம்பத்தில் அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. பின் படிப்படியாக மெல்ல முன்னேற்றம் கண்டு வருவதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அன்பழகனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்த வருகிறார். அவருடன் இளைஞர் அணித் தலைவர் உதயநிதியும் சென்றுள்ளார்.
நேற்று முதல்வர் தொலைபேசியில் நலம் விசாரித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேரில் சென்று நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.