அந்தமான் நிகோபர் தீவில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.7-ஆக பதிவு..


அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் இன்று மதியம் 1.43 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமிக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7- ஆக பதிவானதாக இந்திய புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.