முக்கிய செய்திகள்

விமானம் தாமதமானதால் ஆத்திரம்: மத்திய அமைச்சரை அலறவைத்த பெண் மருத்துவர் (வீடியோ)

Angry woman shouts at Union minister KJ Alphons after flight delayed

மத்திய அமைச்சருக்காக விமானம் தாமதம் ஆனதை தொடர்ந்து பெண் டாக்டர் ஒருவர் மத்திய அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள விமானநிலையத்தில் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கன்னதானம் வருகைக்காக விமானம் புறப்பட தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. அதே விமானத்தில் பெண் டாக்டர் நிராலா என்பவர் நோயாளியை காண்பதற்காக பயணம் செய்ய காத்திருந்தார். மத்திய அமைச்சருக்காக விமானம் புறப்படுவது தாமதப்படுத்தப்படுவதை அறிந்த பெண் டாக்டர் மத்திய அமைச்சர் விமான நிலையத்திற்கு வந்த உடன் அவருடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மத்திய அமைச்சர் டாக்டரை சமாதானப்படுத்த முயன்றார். இதனை ஏற்க மறுத்த பெண் டாக்டர் இனிமேலும் விமானம் தாமதப்படுத்தப்படமாட்டாது என எழுதி தரும் படி கோரினார்.இது தொடர்பான வீடியோ இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது., விஐ.பி., கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி பெண்டாக்டருக்கு வாழ்த்து தெரிவித்தும் பாராட்டுகள் குவிகின்றன. இது குறித்து பெண் டாக்டர் கூறுகையில் விவிஐபி கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் என்றார்