எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அனில் அம்பானி குற்றவாளி என்றும், ரிலையன்ஸ் நிறுவனம் 4 மாதத்துக்குள் 550 கோடி ரூபாயை திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 550 கோடி ரூபாயை திரும்பத் தராமல் பாக்கி வைத்துள்ளனர் என்று எரிக்சன் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அனில் அம்பானி 550 கோடியை ரூபாயை எரிக்கசன் நிறுவனத்திடம் திரும்ப செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்தது.
ஆனால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திரும்ப செலுத்தாத நிலையில், மீண்டும் எரிக்சன் நிறுவனம் சார்பில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அனில் அம்பானியை குற்றவாளி என்றும் அடுத்த 4 மாதத்துக்குள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம்
நிலுவைத் தொகையை எரிக்சன் நிறுவனத்திடம் திரும்ப செலுத்து வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்தவில்லை என்றால் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
மேலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் அவமதிப்பு ஏற்படுத்தியதற்காக 1 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.