முக்கிய செய்திகள்

இந்தியன் – 2 வுக்கு அனிருத் இசையமைக்கிறாரா?

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் இந்தியன்-2 படம் குறித்து தொடக்கம் முதலே பல்வேறு சர்ச்சைகள். படம் கைவிடப்பட்டதாக வந்த தகவலை, பின்னர் படக்குழுவினர் மறுத்தனர். பின்னர் அந்தப் படத்தில் இருந்து கமல் விலகி விட்டார். சூர்யாவிடம் பேசி வருகிறார்கள் எனத் தகவல் வெளியானது. பின்னர் அதுவும் மறுக்கப்பட்டது. ஒருவழியாக இந்தியன்-2 படம் வருவது உறுதியாகி விட்ட நிலையில், தற்போது இசையமைப்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சை தொடங்கி உள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால், இன்னும் அது குறித்து முடிவாகவில்லை என்றும், பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தற்போது நம்பத் தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படியோ, அரசியல் கட்சி தொடங்கப்போவதாக கூறி அன்றாடம் பரபரப்பு செய்திகளில் அடிபட்டு வரும் கமலுக்கு, சினிமா வட்டாரத்திலும் சூடான செய்திகளுக்கு பஞ்சமில்லை என்பது மட்டும் தெரிகிறது.

Aniruth compose to Indian-2?