முக்கிய செய்திகள்

அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிகளை மாற்றக் கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்


சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகளை இடம் மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டது. கடலோர ஒழுங்குமுறை விதியின்படி சமாதிகளை வேறுஇடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. டிராபிக் ராமசாமி மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.