முக்கிய செய்திகள்

சென்னையில் மீண்டும் ஓர் ஐடி ரெய்டு!

சென்னையில் படேல் குழும், மார்க் குழுமம், மிலன் குழுமம்,கங்கா பவுன்டேஷன்ஸ் குழுமம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 21 இடங்களில்வ ருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கூடுதல் விவரங்கள் பின்னர் தெரியவரும்.

இதனிடையே, சத்யம் சினிமாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கி உள்ளனர். சத்யம் சினிமாசுக்கு சொந்தமான தியேட்டர்கள், வீடு, அலுவலகம் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

பெரம்பூர் எஸ் 2 சத்யம் சினிமா தியேட்டர் உரிமையாளர் வீடு மற்றும் செங்குன்றத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது. மேலும் பல இடங்களில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

கடந்த 9-ம்தேதி முதல் ஒரு வார காலம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அதன் தொடர்ச்சியாகவே இந்தச் சோதனைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Another big IT raid in Chennai