புதுவை முதல்வர் நாராயணசாமி போராட்டத்திற்கு அரவிந் கெஜ்ரிவால் நேரில் ஆதரவு..

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பதாக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன் 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நாராயணசாமியின் போராட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு அதெரிவித்தார்.

இது போல் டெல்லி முதல்வர் அரவிந் கெஜ்ரிவால் இன்று புதுச்சேரிக்கு நேரில் வந்து முதல்வர் நாராயணசாமி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

அப்போது டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் உடனிருந்தார்