முக்கிய செய்திகள்

“இருட்டு அறையில் முரட்டு குத்து” இயக்குநர் படத்தில் அரவிந்த் சாமி!

தமிழ் சினிமாவின் தகதக நாயகனாக வலம்வந்த அரவிந்த் சாமி, அண்மைக்காலமாக வெவ்வேறு மாதிரியான அவதாரங்களை எடுத்து வருகிறார்.

தற்போது, இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற பெயரால் கடும் சர்ச்சையில் சிக்கிய படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த் சாமி புதியபடம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதற்கான தொடக்கவிழா நடைபெற்றது 

“செக்க சிவந்த வானம்” படத்திற்கு பிறகு கள்ளபார்ட் , வணங்காமுடி, சதுரங்க வேட்டை 2, நரகாசூரன் ஆகிய படங்களில் அரவிந்த் சாமி நடித்துள்ளார். இந்தப் படங்கள் அனைத்துமே ரிலீசுக்காக காத்திருக்கின்றன.

ஹர ஹர மஹாதேவஹி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் அரவிந்த் சாமி ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் அரவிந்த்சாமி துப்பறியும் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை.

எட்செட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் மதியழகன் இப்படத்தை தயாாிக்கிறார். பள்ளு ஒளிப்பதிவு செய்கிறார். டி. இமான் இசையமைக்கிறார். சென்னை பிரசாத் லேபில் இன்று நடைபெற்ற இந்தப் படத்திற்கான பூஜை நிகழ்ச்சியில் அரவிந்த் சாமி கலந்து கொண்டார்.