முக்கிய செய்திகள்

7 பேர் விடுதலைக்கு பரிந்துரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அற்புதம்மாள் நன்றி

7 பேரை விடுவிக்க பரிந்துரை செய்வதென தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்ததற்காக பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரின் தாயார்களும் முதலமை்சசர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் வெளியானதை அடுத்து பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 28 ஆண்டுகால வலி மற்றும் வேதனைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதேபோல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரியம்மாளும், தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்து வாழ்வதை பார்ப்பதே தமது ஆசை என உருக்கமுடன் தெரிவித்தார்.