அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கம் அதிகாலை 1.45 மணிக்கு ஏற்பட்டது. அலோங் பகுதியின் தென் கிழக்கே 40 கி.மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
இந்தியாவின் மக்கள் தொகை குறைந்த மாநிலங்களில் ஒன்றாக அருணாச்சல பிரதேசம் திகழ்கிறது. அருணாசல பிரதேசத்தை ஒட்டியுள்ள திபெத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.
அருணாசல பிரதேசத்துக்கு சீனாவும் உரிமை கொண்டாடி வருகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாசல பிரதேசம் இன்று இந்தியா திட்டவட்டமாக கூறி வருகிறது.
ஆனால், அந்த பிராந்தியத்தில் உள்ள 90 ஆயிரம் சதுர கி.மீட்டர் பகுதிகளை தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது.