அருந்ததி ராய் எழுதிய புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
.பி.வி.பி. எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
எம்.ஏ. ஆங்கில இலக்கிய பாடத்தில் அருந்ததி ராய் எழுதிய Walking with Comrades என்ற புத்தகம் இடம் பெற்றிருந்தது.
நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததி ராய் எழுதிய புத்தகத்தை நீக்குவது என முடிவு செய்யப்பட்டதையடுத்து, பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதற்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனத்தைதனது டிவிட்டர் பதில் பதிவிட்டுள்ளார்.
அருந்ததி ராய் எழுதிய புத்தகம் நீக்கத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ளார்
ட்விட்டர் பதிவில், ‘ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம் எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்து விடும்,’ எனத் தெரிவித்துள்ளார்..
காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,’RSS பாடத்திட்டத்தில் என்ன இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது பாஐக ஆளும் மாநிலங்களில் நடக்கும் முதல் வேலை , தமிழகத்தில் RSS யின் பிடியில் அதிமுக ஆட்சி என்பது நிரூபணம் . கல்வியை மதவாதம் பிடிப்பதை காக்க வேண்டிய நேரம் … 2021 யில் … தமிழ் மண் முடிவு செய்யும,’ எனத் தெரிவித்துள்ளார்.