முக்கிய செய்திகள்

சூர்யாவுக்கு வில்லனாகும் ஆர்யா!

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கும் NGK படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதனையடுத்து ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்க உள்ள படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இது சூர்யாவிற்கு 37-வது படமாகும். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா சைகல் நடிக்கிறார். இவர்களுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ், பாலிவுட் நடிகர் பொம்மன் இரானி, சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க உள்ளனர். 

இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்  தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 

பாலிவுட் நடிகர் போமன் இரானி இந்தப் படத்தில் நடிக்க உள்ள நிலையில், அவர் தன்னை எடுத்த படத்தை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டுள்ள ஆர்யா, அதற்காக அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இதன் மூலம், சூர்யா 37 படத்தில் ஆர்யா நடிப்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது. 

சூர்யாவை வைத்து அயன், மாற்றான் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த், மூன்றாவது படமாக இதனை இயக்குகிறார். 2014ல் விஜய்யுடன் நடித்து வெளிவந்த ஜில்லா படத்திற்கு பின்னர் மோகன்லால் தமிழிலில் நடிக்கும் படமும் இதுதான்.