ஆசிய தடகள போட்டி: தமிழக வீராங்கனை தங்கம் வென்று சாதனை..

ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

23வது ஆசிய தடகளப் போட்டிகள் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் 2வது நாளான நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழகத்தைச் சோ்ந்த,

இந்திய வீராங்கனை கோமதி மாாிமுத்து 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்தாா்.

இது தொடா்பாக கோமதி கூறுகையில், நான் முதல் நபராக எல்லைக் கோட்டை கடந்து தங்கப்பதக்கம் வென்றுவிட்டேன் என்பதை என்னால் உணர முடியவில்லை என்று தொிவித்துள்ளாா்.

தங்கப்பதக்கம் வென்ற கோமதி திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஏழை விவசாய குடும்பத்தில் இருந்து சென்றவா். விளையாட்டின் மீது கொண்ட அதீத ஆா்வத்தாலும், கடின உழைப்பாலும் அவா் இத்தகைய வெற்றியை பெற்றுள்ளதாக அவரது உறவினா்கள் மகிழ்ச்சி தொிவித்துள்ளனா்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காங்., தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஏப்ரல் 29-ம் தேதி புயல் உருவாகும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி..

Recent Posts