முக்கிய செய்திகள்

ஆசிய குத்துச்சண்டை போட்டி : 5-வது முறையாக தங்கம் வென்றார் மேரி கோம்..


ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் மேரி கோம் தங்கம் வென்றார். 48 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப் போட்டியில் கொரிய வீராங்கனை பீகிம்-ஐ வீழ்த்தி இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கம் வென்றார். ஆசிய குத்துச்சண்டை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 6 முறை மேரி கோம் பதக்கங்களை வென்றுள்ளார். இதில் தற்போது 5-வது முறையாக தங்க பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று நடைபெற்ற 48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதி போட்டியில், இந்திய நட்சத்திர வீராங்கனை மேரிகோம் ஜப்பானின் சுபாசா கோமுராவை எதிர் கொண்டார். இதில் 5-0 என்ற கணக்கில் ஜப்பான் வீராங்கனையை மேரிகோம் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தார். தங்க மங்கை மேரிகோம் தற்போது ராஜ்ய சபா எம்.பியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.