முக்கிய செய்திகள்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்தொடர் : அட்டவணை குறித்து பிசிசிஐ அதிருப்தி..


ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கான கால அட்டவணை முறையாக இல்லை என பிசிசிஐ அதிருப்தி தெரிவித்துள்ளது.

துபாயில் செப்டம்பர் 15ஆம் தேதி ஆசியக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இதில் 19 ஆம் தேதி பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்கிறது. ஆனால் 18ஆம் தேதியும் இந்திய அணி ஒரு போட்டியில் விளையாட வேண்டியுள்ளது.

அடுத்தடுத்த தினங்களில் இந்தியாவுக்கு போட்டிகள் ஒதுக்கப்பட்டு அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதால் பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுடன் மோதும் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு இரண்டு நாட்கள் ஓய்வு கிடைக்கிறது. ஆனால் இந்திய அணிக்கு ஒரு நாள் கூட ஓய்வில்லை.