ஆசியக் கோப்பை கிரிக்கெட் : வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கான் அபார வெற்றி..

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசத்தை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 136 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அபுதாபியில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்காளதேச வீரர் ஷாகிப் அல் ஹசனின் துல்லியமான பந்து வீசும் திறமையால் ஆப்கானிஸ்தானின் முன்னணி வீரர்கள் தொடர்ந்து பெவிலியன் திரும்பினர்.

ஏழு விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இணை சேர்ந்த குல்பதின் நயீப் மற்றும் ரஷி காண் இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆட்டத்தின் இறுதி முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 255 ரன்களை எடுத்திருந்தது.

256 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம் அணியிலிருந்து லிடோன் தாஸ் மற்றும் நிஷ்மல் ஹேசெய்ன் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடினார். ஆப்கானிஸ்தான் அணியினரின் சிறப்பான பந்து வீச்சு, வங்காளதேசத்துக்கு பின்னடவை அளித்தது.

வங்காளதேசத்தின் முன்னணி வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிக்கொடுக்க, அதற்கு அடுத்த வந்த இரண்டாம் நிலை வீரர்களும் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பினர். ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியினரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.

50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த வங்காளதேசம் 119 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன்மூலம் 136 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான் 32 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். அதேபோல வங்காளதேசதுக்கு எதிரான பந்துவீச்சில் ரஷித் கான், முஜீப் அர் ரகுமான், குல்பதின் நயீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வங்காளதேச சார்பாக களமிறங்கிய சார்பில் ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிரடியாக விளையாடி 57 ரன்கள் குவித்து, 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

‘சூப்பர் 4’ சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. லீக் சுற்று போட்டிகளில் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் இதில் மோதவுள்ளன.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தையும், பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது.