முக்கிய செய்திகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி..

துபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி-பாகிஸ்தான்அணியை சந்தித்தது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை எடுத்தது.

பின்னர் களம் இறங்கிய இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மாவும்,சிகர் தவானும் சதம் அடித்து வெற்றிக்கு வழி கோலினர். சிகர் தவான் 114 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

இந்நிலையில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது