ஆசிய- ஐரோப்பிய உச்சி மாநாடு : துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்

ஆசிய- ஐரோப்பிய உச்சி மாநாடு பிரஸ்ஸல்ஸில் இன்று நடைபெற உள்ளது. இந்த 12 வது மாநாட்டில் 51 ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

மாநாட்டை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய - கொரிய உச்சிமாநாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆசியான் தலைவர்கள் கூட்டம் 19ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் ஐரோப்பா – -தென் கொரியா இடையேயான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நேற்று டில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சை சென்றடைந்த அவருக்கு அந்நாட்டு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பெல்ஜியம் சென்றுள்ள வெங்கையா நாயுடு, அந்நாட்டு அரசர் பிலிப், பிரதமர் சார்லஸ் மைக்கேல் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

மேலும்,, அந்நாட்டில் உள்ள ஜெயின் கலாச்சார மையத்தில் பெல்ஜியம்வாழ் இந்திய மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

அதன் பின்னர், பிரஸ்ஸல்ஸின் ஆண்ட்வர்ப் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல்…..

Recent Posts