ஆசிய விளையாட்டுப் போட்டி : ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்றார் ஸ்வப்னா..


இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 7 விளையாட்டுக்களை உள்ளடக்கிய ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான ஹெப்டத்லான் விளையாட்டில் இந்தியா சார்பில் ஸ்வப்னா பர்மன், பூர்ணிமா ஹெம்பிராம் ஆகியோர் பங்கேற்றனர்.

100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டம் ஆகிய 7 விளையாட்டுக்களை உள்ளடக்கிய இப்போட்டியில், 7 விளையாட்டுகளிலும் சேர்த்து சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை பெறுபவருக்கு தங்கம் பதக்கம் கிடைக்கும்.

அந்த வகையில் நேற்று பெண்களுக்கான ஹெப்டத்லானில் 4 பந்தயங்கள் முடிந்தன. இன்று காலை நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய பந்தயங்கள் நடந்தது.

6 பந்தயங்கள் முடிவில் ஸ்வப்னா 5218 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருந்தார். இதனால் அவர் தங்கப் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது.

மற்றொரு இந்திய வீராங்கனையான பூர்ணிமா 5001 புள்ளியுடன் 4-வது இடத்தில் இருந்தார்.

இந்நிலையில், பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டியில் கடைசி பந்தயமான 800 மீட்டர் ஓட்டம் இன்று மாலை நடந்தது. இதில், ஸ்வப்னா 808 புள்ளிகள் பெற்றார்.

பூர்ணிமா 836 புள்ளிகள் பெற்றார். ஒட்டுமொத்தத்தில் 6026 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த ஸ்வப்னா தங்கப்பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைக்கும் 11-வது தங்கம் ஆகும்.

ஒட்டுமொத்தமாக 11 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 54 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியது.

ஆசிய விளையாட்டுப் போட்டி : டிரிபிள் ஜம்ப் போட்டியில் அர்பிந்தர் சிங் தங்கம் வென்றார்..

மியான்மர் ராணுவத்தின் மனித உரிமை மீறலை நியாயப்படுத்த வேண்டாம்: ஐநா காட்டம்..

Recent Posts