ஆசிய விளையாட்டுப் போட்டி : பி.வி. சிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி..


இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற பாட்மிட்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இறுதிப் போட்டியில் தைபை வீராங்கனையை சந்திக்கவுள்ளார்.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தைபை வீராங்கனையிடம் சாய்னாநோவால் தோல்வியடைந்தார்.

சாய்னா வெண்கலம் வென்றார்.