ஆசிய விளையாட்டு போட்டி : டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா வெண்கலம் வென்றார்..


ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

சீனாவின் ஷாங்க் ஷூ-விடம் அரையிறுதி போட்டியில் 4-6, 7-6 என்ற கணக்கில் தோற்றார் அங்கிதா ரெய்னா. எனினும் தற்போது மூன்றாவது இடம் பெற்று வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

தற்போது வரை இந்தியா 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.