சட்டப்பேரவை விவகாரங்களில் மத்திய அரசு தலையிடக்கூடாது : தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா


டெல்லியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை கூறியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

தீர்ப்பில் சாசன பிரிவு 239 ஏ விளக்கப்படுகிறது. தீபக் மிஸ்ரா, கன்வில்கர், சிக்ரி ஆகிய ஒத்த கருத்தை தெரிவித்துள்ளனர். மாநில அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் கூட்டு பொறுப்புள்ளது என 3 நீதிபதிகள் கூறியுள்ளனர். மாநில அரசு, துணை நிலை ஆளுநர் இருவரில் யாருக்கு அதிகாரம் உள்ளது என வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு சட்டப்பேரவை விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று டெல்லி மாநில அதிகாரம் யாருக்கு என்ற வழக்கில், தமைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார். துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்றும், அமைச்சரவையுடன் இணக்கமாக துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் எல்லா விஷயங்களிலும் அமைச்சரவைக்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியமில்லை என்று தமைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.

நேபாளத்தில் நிலச்சரிவால் சிக்கியுள்ள இந்தியர்கள் மேலும் 96 பேர் மீட்பு..

ஆட்சியை கைப்பற்ற சசிகலா, தினகரன் வெறிபிடித்து அலைந்தனர் : அ.தி.மு.க. நாளேடு …

Recent Posts