முக்கிய செய்திகள்

சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்..


தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா மசோதாவை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

உச்சநீதிமன்ற கெடு நாளை முடிவடையும் நிலையில் இன்று லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2018 தமிழக லோக் அயுக்தா என்ற பெயரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்யும். இந்த மசோதாவுக்கு எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஏற்கனவே 17 மாநிலங்களில் லோக் அயுக்தா சட்டம் அமலுக்கு வந்து விட்டது. 18 மாநிலமாக தமிழத்தில் அமலாக உள்ளது.

இந்த மசோதா குறித்து விவாதம் நடத்தப்பட்டு, இன்றே நிறைவேற்றப்பட உள்ளது.