வரும் 14-ஆம் தேதி தொடங்கவுள்ள தமிழக சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
எதிர் கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், கொறடா சக்கரபாணி, துணை கொறடா பிச்சாண்டி ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கூட்டத்தொடருக்கு முன்னதாக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்தும் ஆலோசனை என தகவல் கூறப்பட்டுள்ளது.
