தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் சட்டப்பேரவையில் இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்டன.
பல்கலை. வேந்தராக முதலமைச்சரே செயல்பட வகை செய்யும் மசோதாவும் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இதேபோல், தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா, அண்ணா பல்கலை. திருத்த மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது.