தமிழக சட்டப்பேரவை வரும் 8ஆம் தேதிவரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில், நாளை மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எம்எல்ஏ ஏ.கே.போஸ், நெல் ஜெயராமன் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். அடுத்தடுத்த நாட்களில் இரங்கல் தீர்மானம், ஆளுநர் உரை ஆகியவற்றின் மீதான விவாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
