முக்கிய செய்திகள்

ராஜஸ்தானில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 25 பேர் உயிரிழப்பு..


ராஜஸ்தானில் உள்ள ஒரு ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 25 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

சவோய் மதாப்பூர் பாலத்தில் வேகமாக சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்தது. இதில் பயணித்த பயணிகள் அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். தகவல் அறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் காயமுற்ற நிலையில் 10 பேர் மீட்கப்பட்டதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.