அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ். அரிஹாந்த் வெள்ளோட்டம் : பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல், அணுசக்தியால் இயங்கும்,கடலில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தும் திறன் படைத்த ஐ.என்.எஸ்.அரிஹாந்த் என்ற நீர்மூழ்கி கப்பல் தன் முதல் வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததையடுத்து பிரதமர் மோடி மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐ.என்.எஸ். அரிஹாந்த் நீர்மூழ்கிக் கப்பல் ஊழியர்களை வரவேற்றார். தன் முதல் வெள்ளோட்டத்தை முடித்து வெற்றிகரமாகத் திரும்பியுள்ளது அரிஹாந்த்” என்று பிரதமர் அலுவலகம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தன் ட்வீட்டில், “அதன் பெயருக்கு ஏற்ப, ஐ.என்.எஸ். அரிஹாந்த் 130 கோடி இந்தியர்களைக் காக்கவல்லது, புற அச்சுறுத்தல்களிலிருந்து நம்மைக் காக்கும் மேலும் இப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட அரிஹாந்த் பங்களிப்பு செய்யும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “அரிஹாந்த் இந்தியாவின் வலிமைக்கு சான்றாக விளங்குகிறது. இதனை உருவாக்கி இதற்கென பணியாற்றிய அனைத்து பிரிவினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஐ.என்.எஸ்., அரிஹாந்த் அணுசக்கி திறன் கொண்டது..

கடலில் இருந்து கொண்டு எதிரி நாட்டு நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தும் வல்லமை படைத்தது. எங்களை மிரட்டும் நாடுகளிடம் அமைதி காக்கிறோம். இது அண்டைய நாட்டின்பால் கொண்டுள்ள அன்பை காட்டுகிறது. அரிஹாந்த்தின் வெற்றி நமது தேசிய பாதுகாப்பை உறுாகப்படுத்தியுள்ளது. அணு ஆயுதங்களை காட்டி நம்மை யாரும் மிரட்ட முடியாது” என்று பிரதமர் மோடி பேசினார்

தமிழில் வினாத்தாள் விவகாரம் : கவிஞர் வைரமுத்து கண்டனம்..

என் தாயை அனுமதிக்காத கடவுள், கடவுளே இல்லை : நடிகர் பிரகாஷ் ராஜ்…

Recent Posts