ஸ்டாலினுடன் ஆஸ்திரேலிய, ரஷ்ய பிரதிநிதிகள் சந்திப்பு

திமுக தலைவர் மு.கஸ்டாலினை ஆஸ்திரேலிய தூதரக பொதுச் செயலாளர் திருமதி சுரேன் கிரேஸ்  மரியாதை  நிமித்தமாக சந்தித்தார்.

இதேபோல், ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மைய நிர்வாக இயக்குநர் கென்னடி A.ராகேல்வும் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி திமுக தலைவர் ஸ்டாலினை மலர்க்கொத்துடன் ச ந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதனிடையே, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி கோபாலபுரம் இல்லத்தில் கலைஞரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக தலைவர் ஸ்டாலினும் உடன் இருந்தார்.