ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 104 ரன்கள் எடுத்த கோலி, ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இன்றைய வெற்றி குறித்து கருத்து தெரிவித்த கோலி, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை இறுதி ஓவர்களில் கட்டுப்படுத்த முயற்சித்தோம்.
மார்க்ஸ், மேக்ஸ்வெல் விக்கெட்களை வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
இதனால் எங்களுக்கான இலக்கு கடினமானதாக இல்லை. இந்திய அணியில் 5 பந்து வீச்சாளர்கள் சிறப்பான முறையில் பந்துவீசினர்.
கேப்டன் என்ற முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அணியின் வெற்றிக்கு என்னால் முடிந்த அளவு பலம் சேர்ப்பேன்.
வழக்கம் போல் ஆட்டத்தின் இறுதியில் தோனி களைப்பாகி விட்டார். இருப்பினும் தனது தனித்துவமான விளையாட்டை நிரூபித்தார்.
ஆட்டத்தின் போது தோனி என்ன நினைக்கிறார் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும்.
அதனை யாராலும் கணிக்க முடியாது.
அவருக்கும் ஹேட்ஸ் ஆஃப். இதேபோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக்கும் வாழ்த்துகள் என்று கோலி கூறினார்.