முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் வருகிற மே 30ந்தேதி தொடங்க உள்ளது.

இதற்கு முன் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரு டி20 சர்வதேச போட்டிகளிலும் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடுகிறது.

இந்த போட்டி பிப்ரவரி 24ந்தேதி தொடங்க உள்ளது.

இதில் கே.எல். ராகுல், இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். மயங்க் மார்கண்டே சுழற்பந்து வீச்சாளராக அறிமுகம் ஆகிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிராக சர்ச்சையாக பேசிய ராகுல், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தும்படி கேட்டு கொள்ளப்பட்டார்.

இதன்பின் இந்திய ஏ அணியில் விளையாடிய ராகுல், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக சிறப்புடன் விளையாடினார்.

இதேபோன்று மயங்க் (வயது 21) இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்புடன் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து நடந்த தேசிய தேர்வு குழு கூட்டத்தில் ராகுல் மற்றும் மயங்க் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். தினேஷ் கார்த்திக் ஒரு நாள் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் (துணை கேப்டன்), கே.எல். ராகுல், தவான், ரிஷப் பான்ட், தினேஷ் கார்த்திக், தோனி (விக்கெட் கீப்பர்),

ஹர்திக் பாண்ட்யா, கிருணால் பாண்ட்யா, விஜய் சங்கர், சஹல், பம்ரா, உமேஷ் யாதவ், கவுல், மயங்க் மார்கண்டே.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மற்றும் 2வது ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் (துணை கேப்டன்), கே.எல். ராகுல், தவான், ரிஷப் பான்ட், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரீத் பம்ரா, முகமது ஷமி, சஹல், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், சித்தார்த் கவுல்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள 3 ஒரு நாள் போட்டிக்கான அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் (துணை கேப்டன்), தவான், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரீத் பம்ரா, புவனேஷ்வர் குமார், சஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, விஜய் சங்கர், கே.எல். ராகுல், ரிஷப் பான்ட்.