அவனியாபுரம் ஜல்லிகட்டு: இன்று கால்கோள் விழா உற்சாகம்..

மதுரை அவனியாபுரத்தில் வருகின்ற 14 ஆம் தேதி ஜல்லிகட்டு நடக்கவிருக்கும் நிலையில் , அதற்கு முன்னதாக கால்கோள் விழா இன்று நடைபெற்றது.

தமிழர்களின் பண்பாடான ஜல்லிகட்டுக்கு தடை நீங்கி , தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் ஜல்லிகட்டு நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக ஜனவரி 2 ஆம் தேதி புதுக்கோட்டையில் உள்ள தச்சங்குறிச்சியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் சுமார் 450 காளைகளும் 100 க்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்துகொண்டனர். போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வருகின்ற 14 தேதி மதுரையில் உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அவனியாபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்டமாக கால்கோள் விழா நடைபெற்றது. பூஜை செய்யப்பட்டு குங்குமம், சந்தனம் பூசிய கம்பம் நடப்ப்பட்டது.

இது தொடர்பாக அவனியாபுர ஜல்லிக்கட்டு ஒருகிணைப்பாளர் கூறயதாவது ‘ வருகின்ற 14 தேதி ஜல்லிகட்டு நடைபெறுவதை முன்னிட்டு , கால்கோள் விழா நடைபெற்றது. நடக்கவிருக்கம் போட்டியில் 800 காளைகள் கலம் இறக்கப்படுகின்றன. 700க்கும் மேற்பட்ட ஜல்லிகட்டு வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த போட்டி நடைபெறுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் போட்டியில் வெற்றிபெறும் வீரர்களுக்கு மோட்டார் பைக் , வெள்ளி காசு போன்ற பரிசுகள் வழங்கப்படும் . என்று அவர் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் போட்டிகளுக்கு முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும் என்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஜல்லிகட்டுக்குழு அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.