அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீர்களுக்கு இன்ஸ்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தை பொங்கல் விழாவையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நாளை முதல் முறையே 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாடுபிடி வீரர்களுக்கு உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் 2 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவனியாபுரத்தில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 691 காளைகளும், 594 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 988 காளைகளும், 846 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.