‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கணவர் குறித்து ‘அவரும் நானும்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார், இந்தப் புத்தகம் பிப்.27ம் தேதி வெளிவருகிறது.

தமிழகத்தின் கவனத்துக்குரிய ஒரு அரசியல் குடும்பத்தில் ஸ்டாலின் மனைவியாக, திமுக தலைவர் மு.கருணாநிதியின் மருமகளாக இளம் வயதில் குடும்ப வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்த 5 மாதங்களில் இந்தியாவின் பெரிய அரசியல் குழப்பத்தில் சிக்குவோம் என்று எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. காரணம் கணவர் மு.க.ஸ்டாலின் நெருக்கடி நிலை காலக்கட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டதே.

நெருக்கடி நிலை பிரகடன அனுபவம் மு.க.ஸ்டாலின் அரசியல் பிரவேசத்துக்கான பாதையாக அமைந்தது. இப்போது 40 ஆண்டுகள் கழித்து அப்போது அரசியலில் ஈடுபாடில்லாமல் குடும்ப மனிதராக தன் கணவர் ஸ்டாலின் இருந்தார் என்று துர்கா ஸ்டாலின் தன் நூலில் பதிவு செய்துள்ளார்.

இந்தப் புத்தகத்தை பதிப்பித்து கொண்டு வந்துள்ள உயிர்மை பதிப்பகத்தின் மனுஷ்யபுத்திரன் கூறும்போது, “இந்தப் புத்தகத்தை வாசித்தால் மு.க.ஸ்டாலினும் அவரது மனைவியும் ஒரு நடுத்தர வர்க்க தம்பதியினர் அனுபவிக்கும் அத்தனைப் போராட்டங்களையும் சந்தித்திருப்பது தெரியவரும். இருவரும் சேர்ந்து பட்ட கஷ்டங்களை விரிவாக இவர் எழுதியுள்ளார். அதாவது நெருக்கடிநிலை, அரசியல் தோல்விகள், வெற்றிகள் ஆகியவற்றுடனான தங்கள் போராட்டத்தைப் பதிவு செய்துள்ளார்.

இந்த நூலின் உள்ளடக்கங்கள் ஸ்நேகிதி பத்திரிகையில் 2011 முதல் 2015 வரை ‘தளபதியும் நானும்’ என்ற தலைப்பில் தொடராக வெளிவந்தது .

“எமெர்ஜென்சி காலக்கட்டத்தில் கோபாலபுரம் வீடு துக்க வீடு போல் காட்சியளித்தது. கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். கைது செய்யப்பட்ட கட்சிக்காரர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து இங்கு வந்தவண்ணம் இருந்தனர். அவர்கள் கண்ணீர் விட்டுக் கதறும் போது என் மாமியார் என்னைப் பார்த்து தேற்றிக் கொள்ளுமாறு கூறுவார், அதாவது திருமணமாகி 5 மாதங்களேயான நானும் கணவரைப் பிரிந்ததை எடுத்துக் கூறுவார். முன்னாள் மேயர் சிட்டிபாபுவின் குடும்பத்தினரை அவர் தேற்றும் போது, கலைஞர் அவர்கள் பாளையங்கோட்டைச் சிறையில் இருந்த போது என் கணவர் (ஸ்டாலின்) குழந்தையாக இருந்ததை அவர்களிடம் கூறுவார். சமையல் வேலையில் இருந்த தாயம்மா கூட பயத்தில் வேலையை விட்டுச் சென்றார். என் மாமியார் கூறுவார், எமெர்ஜென்சி நம் உண்மையான நண்பர்கள் யார் என்ற் காட்டியது என்பார்” என்று தன் புத்தகத்தில் துர்கா ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும் நெருக்கடி நிலை காலக்கட்டத்தில் இரவு நேரங்களில் தான் அழுததையும் பதிவு செய்துள்ளார். ஒரு நோட்டில் ராமஜெயம் என்று எழுதியதையும் குறிப்பிட்டுள்ளார். கபாலீஸ்வரர் கோயிலுக்கும் ரெகுலராக சென்றதையும் பதிவிட்டுள்ளார்.

“இந்தப் புத்தகம் அரசியல் குடும்பம் ஒன்றின் வாழ்க்கையின் ஒரு கண்ணோட்டத்தை இந்தப் புத்தகம் அளிக்கும்” என்கிறார் மனுஷ்யபுத்திரன்.

முத்தரப்பு டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு..

திருவொற்றியூரில் மாசிமாக விழா தோற்றமும் சிறப்பு…

Recent Posts