சர்ச்சைக்குரிய அயோத்தி பாபர் மசூதி இடம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு…

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை அளிக்க உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த, அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலத்தை சன்னி முஸ்லிம் வக்ப் வாரியம்,

நிர்மோகி அகாரா அமைப்பு மற்றும் ராம்லாலா அமைப்பு ஆகியவை பிரித்துக்கொள்ள வேண்டும் என 2010ல் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண், அப்துல் நசீர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று மதியம் 2.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.