முக்கிய செய்திகள்

அயோத்தி வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம் : உச்சநீதிமன்றம் உத்தரவு…

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை உரிமை கோருவது தொடர்பான வழக்கை புதிய அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம்,

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், வழக்கை ஜனவரி மாதம் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை புதிய அமர்வுக்கு மாற்றி, வழக்கு விசாரணையை ஜனவரி 10ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.