பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை: முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை..

பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

பேருந்து மீது கல்வீசி தாக்கிய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

3 ஆண்டுகள் சிறை என்பதால் பாலகிருஷ்ண ரெட்டியின் பதவி பறிபோக வாய்ப்பு உள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் 2வது தீர்ப்பு இது ஆகும்.

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தண்டனையை நிறுத்தி வைத்து அவருக்கு, ஜாமீன் வழங்கியது சிறப்பு நீதிமன்றம்.

தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம் என்று அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கூறினார்.

1998-ல் ஒசூர் அருகே பாகலூரில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக அவர் மீது வழக்கு போடப்பட்டது.

3 ஆண்டுகள் சிறை தண்டனை மூலம், அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியை பாலகிருஷ்ண ரெட்டி இழக்க நேரிடும். சிறை தண்டனைக்கு பிறகும் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

இந்நிலையில், பாலகிருஷ்ண ரெட்டிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை தொடர்ந்து முதல்-அமைச்சர்பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.