முக்கிய செய்திகள்

“பலூன்” புஸ்ஸானதற்கு நடிகர் ஜெய்தான் காரணம்: தயாரிப்பாளர்கள் புகார்

 

ஜெய், அஞ்சலி இருவரும்   ஜோடியாக நடித்த பலூன் படம் கடந்த மாதம் 29ம் தேதி வெளிவந்து, திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதன் தயாரிப்பாளர்கள் நந்தகுமார், அருண்பாலாஜி இருவரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்.  ஜெய்யின் பொறுப்பற்ற போக்கால் பலூன் படப்பிடிப்பு சுமார் ஒராண்டுக்கும் மேல் தாமதமானதாகவும் , இதனால் தயாரிப்புச் செலவு ஒன்றரைக் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாகவும் அதில் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வரை நடிகர் ஜெய் வேறு படங்களில்   ஒப்பந்தமாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஜெய் மீது தயாரிப்பாளர்கள் வைத்துள்ள இந்தப் புகார் கோலிவுட் வட்டாரத்தைப் பரபரக்க வைத்திருக்கிறது.